தஞ்சாவூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்த்து மாற்றுத்திறனாளி ஒருவர், காரை விட்டு கீழே இறங்கி வந்து பார்க்க மாட்டீர்களா என்று கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகராட்சி பணியாளர்கள் காத்திருந்தபோது, அப்பகுதியை கடந்து வந்த உதயநிதி ஸ்டாலின், வாகனத்தில் இருந்து இறங்காமல் அரசு அலுவலர்களை சந்தித்தார். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த மாற்றுத்திறனாளி ஒருவர், காரை விட்டு இறங்குங்கள் என துணை முதலமைச்சரை பார்த்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.