ஜப்பானில் நடைபெற்ற நெப்போலியன் மகன் திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
80 மற்றும் 90களில் கம்பீர தோற்றத்தால் பல கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகை கலக்கி வந்த நெப்போலியன், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
அவரது மூத்த மகனான தனுஷ் தசைப்பிடிப்பு சம்பந்தமான அரிய வகை பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அமெரிக்காவிலேயே சிகிச்சைகளும் மேற்கொண்டார்..
இந்நிலையில் 24 வயதாகும் தனது மகன் தனுஷுக்கு, பெண் பார்த்து வந்த நெப்போலியன், திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் வீடியோ கால் மூலம் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்தார்.
நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வாழ்த்துகளை பெற்றாலும் மற்றொரு புறம் விமர்சனங்களையும் பெற, எதற்கும் செவி சாய்க்காத நெப்போலியன் தனது மகனுக்கு ஜப்பானில் திருமணம் செய்து வைத்துள்ளார்...
திருமணத்திற்கு முன்பாக இருவரும் நடத்திய போட்டோஷூட்டும் இணையத்தில் வைரலானது...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஜாம் ஜாம் என நடைபெற்ற திருமணத்தில் நெப்போலியனின் நெருங்கிய திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
நடிகை மீனா, குஷ்பூ, கலா மாஸ்டர், நடிகர்கள் கார்த்தி, பாண்டியராஜன், சரத்குமார், ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்...
இதனுடன் திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வர, புதுமண தம்பதிக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது.