விவரம் தெரியாமல் அந்த இடைதில் அரிவாள் கடை.. “கடைய மூடுப்பா..'' - மூட்டை கட்டி அனுப்பிய போலீசார்..
சென்னை புறநகரான வண்டலூர் அருகே, விவரம் தெரியாமல் அரிவாள், கோடரி வியாபாரம் செய்த வியாபாரியை, கடையை மூடுப்பா என்று கூறி,போலீசார் அனுப்பி வைத்தனர். மண்ணிவாக்கம், ஓட்டேரி பகுதிகளில் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடந்து வந்ததால், அந்த பகுதி போலீஸ் வட்டாரத்தில் தீவிர கண்காணிப்பில் உள்ளது. இதை அறியாத வியாபாரி ஒருவர், படப்பை செல்லும் சாலையில், வகை வகையான அரிவாள், கத்திகளை சாலை ஓரம் பரப்பி விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இதையறிந்து வந்த போலீசார், யாரப்பா நீ, நல்லா இருப்ப, முதல்ல கடையை காலி பண்ணு என்று கூறி,
அந்த இடத்திலிருந்து அனுப்பி வைத்தனர்.