ஒரே ஜம்ப்.. பள்ளியை கட் அடித்து தாவிய ஸ்டுடென்ட்ஸ் - வெளியான அதிர்ச்சி காட்சி..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சுவர் ஏறி குதித்து வெளியே செல்லும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களால் மாணவர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் அதிகரிப்பதுடன், பள்ளியின் பெயரும் கெட்டுப் போகும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வியை வழங்கி, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.