அமரன் படத்தை தடை கோரி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்..- கமல் புகைப்படம் எரிப்பு - சென்னையில் பரபரப்பு..

Update: 2024-11-08 03:09 GMT

சென்னையில், அமரன் படத்தை தடை செய்யக்கோரி SDPI கட்சி சார்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள

அலுவலகம் முற்றுகையிட்ட SDPI கட்சியினர்,

சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அமரன் திரைப்படம் இருப்பதாக தெரிவித்தனர்.

தமிழக அரசை கண்டித்தும், நடிகர் கமலஹாசனை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் திடீரென நடிகர் கமலஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்