திருமண மண்டபம் மேல் சுற்றி வந்த ஹெலிகாப்டர்...
கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவை பெற்றோர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கும்பகோணத்தில். ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவை பெற்றோர் கொண்டாடி மகிழ்ந்தனர். கணேசன் என்பவரின் மகன் அர்ஜூன் முதலாவது பிறந்த நாள் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் மலர்கள் தூவி வாழ்த்துவதற்காக தனியார் ஹெலிகாப்டர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து மண்டபத்தின் மேல் 3 முறை வட்டமிட்ட ஹெலிகாப்டர், மலர்கள் தூவி சென்றது. ஹெலிகாப்டர் திடீரென வட்டமடித்ததால் அதனை ஏராளமானோர் வியப்புடன் பார்த்து சென்றனர்..