"பொன்பரப்பியில் மறுவாக்குபதிவு நடத்த வாய்ப்பில்லை" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பொன்பரப்பியில் மறுவாக்குபதிவு நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பொன்பரப்பியில் மறுவாக்குபதிவு நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொன்பரப்பியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை கொடுத்துள்ளதாக தெரிவித்தார். சூலூர், ஒட்டபிராரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளில் மொத்த உள்ள ஆயிரத்து 125 வாக்குசாவடிகளில் 201 வாக்குசாவடிகள் பதற்றமனவை என்று கண்டறிப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாஹு கூறினார்.