"வரம்பு மீறி விசாரணை செய்கிறார்கள்" - ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பல்லோ குற்றச்சாட்டு

பாரபட்சமாக செயல்படுவதாகவும் நீதிமன்றத்தில் புகார்

Update: 2019-03-04 19:55 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், விசாரணை வரம்புகளை மீறி செயல்படுவதாக, அப்பல்லோ மருத்துவமனை சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், வரம்பை மீறி ஆணையம் விசாரணை நடத்துவதாகவும், பாரபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து அவரது வாதம் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்