உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிக்கு அதரவு : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியை வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பதாக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சட்டம் மற்றும் நீதி தொடர்பான மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ் மொழி 1971-ம் ஆண்டில் கீழமை நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக கொண்டு வரப்பட்டபோது, கிராமப்புற மக்களுக்கு பெரும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார். அந்தந்த மாநில மொழிகளை உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஆதரிப்பதாகவும் ஆளுனர் தெரிவித்தார்.