மேகதாது அணை : தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கும் - ஜி.கே.மணி
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
மேகதாது விவகாரத்தில் இரண்டு மாநிலங்களையும், இரு கண்களாக பாவித்து, மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தி உள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும், என்றார்.