வில்லா கட்டி தருவதாக கூறி ரூபாய் 19 லட்சம் மோசடி செய்த வழக்கில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை வரும் டிசம்பர் 8-ந் தேதி வரை கைது செய்யக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் அவருடைய நண்பர்கள் ராஜீவ் குமார், வெங்கடேஷ் கினி ஆகியோர் சேர்ந்து கண்ணபுரத்தைச் சேர்ந்த சரிஷ் கோபாலன் என்பவரிடம் வில்லா கட்டி தருவதாக கூறி ரூ.19 லட்சம் வாங்கி உள்ளனர். ஆனால், பேசியபடி வில்லா கட்டி கொடுக்காமல் மோசடி செய்ததாக சரிஷ் கோபாலன் அளித்த புகாரின்பேரில், கண்ணூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீசாந்தை டிசம்பர் 8 ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என கண்ணூர் காவல்துறைக்கு உத்தரவிட்டது.