பாராலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மகளிர் எஸ்.ஹெச்-6 (S.H6) ஒற்றையர்ப் பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கானப் போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ரினா மர்லினா உடன் நித்யஸ்ரீ சிவன் மோதினார். போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நித்யஸ்ரீ சிவன், 21க்கு 14, 21க்கு 6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினார்.