2025ம் ஆண்டு ஐபிஎல் - சூடு பிடிக்க போகும் களம் - ஐபிஎல் தலைவர் சொன்ன மாஸ் தகவல்
2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரையொட்டி மெகா ஏலம் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த ஐபிஎல் தொடருக்கு வீரர்கள் மெகா ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என ஏற்கனவே தகவல்கள் பரவின. இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தி பேசியுள்ள ஐபிஎல் தலைவர் அருண் துமால், நிச்சயமாக அடுத்த சீசனுக்கு மெகா ஏலம் நடைபெறும் என்றும், அணிகளில் புதிய வீரர்கள் இடம்பெறுவதால் தொடர் மேலும் சுவாரஸ்யமாகும் என்றும் அருண் துமால் தெரிவித்துள்ளார்.