Asian Game | பதக்க பட்டியலில் முதலிடத்தில் யார்? இந்தியாவுக்கு எந்த இடம்?
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்க பட்டியலில் சீனா முதல் இடத்தில் நீடிக்கிறது. 147 தங்கம், 81 வெள்ளி, 42 வெண்கலம் என 270 பதக்கங்களை சீனா வென்றுள்ளது. 33 தங்கம், 44 வெள்ளி, 45 வெண்கலம் என 122 பதக்கங்களுடன் ஜப்பான் 2ம் இடத்திலும், 31 தங்கம், 39 வெள்ளி, 63 வெண்கலம் என 133 பதக்கங்களுடன் தென் கொரியா 3ம் இடத்திலும் உள்ளன. 13 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம் உள்ளிட்ட 60 பதக்கங்களுடன் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. 12 தங்கம், 10 வெள்ளி, 17 வெண்கலம் என 39 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் சீன தைபே 5ம் இடத்தில் இருக்கிறது. 11 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என 43 பதக்கங்களுடன் உஸ்பெகிஸ்தான் 6ம் இடத்தில் உள்ளது.