டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் கனடாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்கா வீழ்த்தியது. அமெரிக்காவின் டல்லாஸில் நடைபெற்ற போட்டியில், குரூப் A பிரிவில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கனடா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கனட வீரர்கள் நவநீத் 61 ரன்களும், நிகோலஸ் கிர்டன் 51 ரன்களும் எடுத்தனர். கடினமான இலக்கை துரத்திய அமெரிக்க அணி, 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அமெரிக்க வீரர் ஆரோன் ஜேம்ஸ் 10 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் விளாசி அசத்தினார். ஐசிசி தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்த அமெரிக்க அணி, குரூப் A பிரிவில் 2 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.