"ஊழலை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை"- அதிமுக கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2024-07-08 14:20 GMT

கோவை மாமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேயர் கல்பனா ராஜினாமா குறித்து துணை மேயர் வெற்றிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, ராஜினாமாவுக்கு காரணம் என்ன என அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதனால், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நடைபெற்றதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதைதொடர்ந்து மாமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன், மேயர் கல்பனா ராஜினாமா குறித்த சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்