தமிழ் புதல்வன் திட்டம்.. வங்கி கணக்கில் வந்த ரூ.1000 - மாணவர்கள் சொன்ன கருத்து
அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் உயர்க்கல்வி சேர்க்கையை அதிகரிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 73 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இந்த திட்டத்திற்கான முதல் மாத தொகை நேற்றிரவு, பயன்பெறும் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கோவை அரசு கலைக்கல்லூரி நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதேபோன்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அமைச்சர்கள் முன்னிலையில் காணொளி மூலம் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது...