உத்தர பிரதேச மாநிலம், பிலிபிட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ஒட்டு மொத்த சிரமங்களுக்கு மத்தியில், தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்பதை இந்தியா இன்று காட்டிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். சில நேரங்களில் காங்கிரஸ் அரசுகள், உலகத்திடம் உதவி கேட்டன என்றும், ஆனால் கொரோனா நெருக்கடியில், உலகம் முழுவதும் இந்தியா மருந்துகளையும் தடுப்பூசிகளையும் அனுப்பியது என்றும் அவர் கூறினார். காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை, முஸ்லிம் லீக்கின் அறிக்கை என்று கூறிய அவர், காங்கிரஸ் கட்சியும் அதன் இந்தியா கூட்டணியும் நாட்டின் மாபெரும் ஆளுமைகளை அவமதிக்கத் தயங்குவதில்லை என்றும் அவர் கூறினார்.