அதிர வைத்த மதுரை மகளிர் விடுதி விவகாரம்... ``எல்லா ஆட்சியிலும்..'' - அமைச்சர் பிடிஆர் அதிரடி

Update: 2024-09-12 15:09 GMT

மதுரை கட்ராபாளையம் பெண்கள் விடுதியில் தீ விபத்தில் தப்பித்த பெண்களுக்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆறுதல் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிமேல் இதுபோல் நடக்காமல் இருப்பதற்கு விதிகள் வகுக்கப்படும் என்றார். இதுபோன்ற விதிமீறல், குளறுபடி சென்ற ஆட்சியிலும் நடந்துள்ளன, இப்போதைய ஆட்சியிலும் நடந்துள்ளன என்று கூறிய அவர், அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் விடுதிகளில் பல்வேறு குளறுபடி உள்ளன என்றவர், இதுகுறித்து தலைமை செயலாளருடன் பேசி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்