திடீரென ஜெயிலுக்குள் இருந்து நாட்டுக்கு பரபரப்பு செய்தி சொன்ன கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சியை உடைத்துவிட்டு டெல்லியில் ஆட்சியமைக்க நினைத்தார்கள் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவே சிறையில் இருந்த போது ராஜினாமா செய்யவில்லை என்ற கெஜ்ரிவால், டெல்லியில் நவம்பரில் தேர்தலை நடத்த வேண்டும் என்று பேசியுள்ளார். டெல்லி சட்டப்பேரவை பதவிக்காலம் 2025 பிப்ரவரி 15 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. 2020-ல் டெல்லியில் பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இப்போது மகாராஷ்டிர மாநிலத்தோடு சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கெஜ்ரிவால் முன்வைத்திருக்கிறார்