"கோடையில் மின்தடை ஏற்படாது" - அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்குறுதி

Update: 2025-03-22 16:37 GMT

கோடைக் காலத்தை சமாளிக்கும் வகையில் கூடுதலாக டெண்டர் மூலம் மின்சாரம் பெறப்பட்டுள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட பிறகு செய்தியாள்களுக்கு பேட்டி அளித்த அவர், நம் தேவையை விட கூடுதலாகவே நம்மிடம் மின்சாரம் உள்ளது என்றும், கோடையை சமாளிக்க டெண்டர் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது என்றும் தெரிவித்தார். முதல்வர் அறிவித்துள்ள மின்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருமானால், தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்