உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ., கு.க.செல்வத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட கு.க.செல்வத்தின் உடலில், திமுக கொடி போர்த்தப்பட்டு இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்பு கோடம்பாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் குடும்ப வழக்கப்படி மரியாதை செலுத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் வேலு, தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.