"2 மாதத்திற்குள் முடிக்கணும்"-மழைநீர் வடிகால் பணியை பார்வையிட்ட முதல்வர்-அதிகாரிகளுக்கு அன்பு கட்டளை
சென்னை அசோக் நகர் 4வது அவென்யூ பகுதியில்ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 2 மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதியை முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்தார். உடனடியாக காரை நிறுத்தி சி.ஆர்.சரஸ்வதியிடம் நலம் விசாரித்த முதல்வர், தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.