"சீனாவுக்கு மாற்று தமிழ்நாடு.." - காலரை தூக்கி சொன்ன அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Update: 2024-10-04 04:24 GMT

சீனாவிற்கு மாற்று உற்பத்தி மையமாக தமிழ்நாடு உள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கனெக்ட் மதுரை - 2024, நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழில்துறை உற்பத்தியில் இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது என குறிப்பிட்டார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியை பெருக்க கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். உற்பத்தி நிலையங்களை அதிகரித்து சீனாவிற்கு மாற்றாக, நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் ஏற்ற சூழல் அமைகிறது என பேசினார். மேலும் ஆண்டுதோறும் 60 முதல் 70 சதவீதம் வரையில் தொழில் துறையில் வளர்ச்சி கண்டு வருகிறது. விரைவாக தொழில்நுட்ப திறன் கொண்ட இளைஞர்களை பணியில் அமர்த்தி உற்பத்தி அளவை அதிகரிக்கும் பட்சத்தில், ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைந்து விட முடியும் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்