"ஆளுநர் சாதாரண ஊழியர் தான்.." - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

Update: 2025-01-08 02:45 GMT

துணைவேந்தரை நியமிக்காததால் தான், அண்ணா பல்கலைக்கழகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டதாகவும்,

இவற்றுக்கெல்லாம் காரணம் ஆளுநர் தான் என்பதை, இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா? என, திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். பொன்னேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் ரவியின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதாக கூறினார். ஆர்.என்.ரவி தற்போது சாதாரண ஊழியர் மட்டுமே, நிரந்தர ஆளுநர் கிடையாது என்றார்.இதனால் தான் ஏன் உரையை வாசிக்க வேண்டும் என வெளிநடப்பு செய்துவிட்டதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்