"தமிழகம் அவசரநிலையில் தத்தளிக்கிறது" - அண்ணாமலை பரபரப்பு ட்வீட் | Annamalai | BJP | Thanthi TV
தி.மு.க. ஆட்சியில், எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை என்றும் ஆனால் தி.மு.க.வின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜனநாயக ரீதியாக, சுவரொட்டி மூலமாக கூட தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அனுமதி இல்லை, ஆனால் ஆளுநரையும், எதிர்க்கட்சிகளையும் வசைபாடும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு எனக் கூறியுள்ளார். தி.மு.க. ஆட்சியில் தமிழகம், அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்றும், விரைவில் மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.