காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்... கன்னியாகுமரியை பூர்வீகமாக கொண்டவர்... ஜனவரி 14ம் தேதி பதவியேற்கிறார்...
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வசூல் வேட்டையில் தீவிரம் காட்டும் ஆம்னி பேருந்துகள்... கட்டணம், பன் மடங்கு உயர்ந்ததால், சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோர் அதிர்ச்சி...
- நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பெட்டிகள் அதிகரிப்பு... 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில், வரும் 11ம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என, ரயில்வே அறிவிப்பு...
- கும்பகோணம் - திருவிடைமருதூர் சாலையில் திருவிடைமருதூர் டிஎஸ்பி தலைமையில் போலீசார் அதிரடி வாகன சோதனை... உரிய ஆவணங்கள் இன்றி சென்றவர்கள், தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்ததால் பரபரப்பு
- மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆன்-லைன் டோக்கன் முன்பதிவு நிறைவு... 12 ஆயிரத்து 632 ஜல்லிக்கட்டு காளைகளும், 5 ஆயிரத்து 347 மாடு பிடி வீரர்களும், முன்பதிவு செய்து தயார்நிலை...
- சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்... முறையாக வழக்கு விசாரணை செய்யவில்லை என்ற புகாரில், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி கைது... குற்றவாளி என கருதப்படும் சதீஷ்க்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. 103வது வட்டச் செயலாளர் சுதாகரும் கைது...
- திருவள்ளூர் மாவட்டத்தில், வீட்டிற்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியால் இளம்பெண் பலி... மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் எனக்கூறி, பொது மக்கள் சாலை மறியல்...
- ஆவடி அருகே, உறவினர் வீட்டுக்கு சென்ற 5 வயது சிறுவன் மூடப்படாத உறை கிணற்றில் விழுந்து பலி... போலீசார் வழக்கு பதிந்து விசாரணை...
- பொதுவான இடத்தில், கட்சிக்கொடி வைக்க ஏன் அனுமதி கோருகிறீர்கள்...? ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் கட்சிக் கொடி மரத்தை வைத்துக் கொள்ளலாமே என்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி...
- தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம்... அ.தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ் சார்பில் தரப்பட்டுள்ள அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா என எதிர்பார்ப்பு...
- ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்போம்... இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி...