பிரசாந்த் கிஷோருடன் ரகசிய சந்திப்பு? - விஜய் தரப்பு விளக்கம்

பிரபல தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-03-15 12:09 GMT
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பங்குபெற்று ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியானது நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு முக்கிய பங்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரபல தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இப்படியொரு சந்திப்பே நடைபெறவில்லை எனவும், தற்போது விஜய் சென்னையில் இல்லை எனவும் விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்