மேடையில் ஏறியதும் உணர்ச்சி பொங்க பேசிய துணை முதல்வர் உதயநிதி - கனிமொழி போட்ட ட்வீட்

Update: 2024-10-02 03:38 GMT

சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் உள்ள பார்வையாளர் மாடத்திற்கு, முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜின் பெயர் சூட்டப்பட்டது. அவரது பெயர்சூட்டிய பார்வையாளர் மாடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், டென்னிஸ் விளையாட்டை இந்தியா முழுவதும் பார்க்க வைத்த பெருமைக்குரியவர் விஜய் அமிர்தராஜ் என்று பாராட்டினார். பின்பு பேசிய விஜய் அமிர்தராஜ், தனது பெயரை பார்வையாளர் மாடத்திற்கு வைத்தது உணர்வுப்பூர்வமான தருணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிறுவயது புகைப்படத்துடன் தாம் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அப்பா நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள்; நான் தனியாக இல்லை என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு, இப்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்