காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-02 00:53 GMT

இஸ்ரேல் மீது சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது ஈரான்...

இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரிப்பு...

ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து, பதுங்கு குழிகளில் இஸ்ரேலிய மக்கள் தஞ்சம்... பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க ராணுவம் அறிவுறுத்தல்...

ஈரான் தாக்குதலுக்கு தக்க பதிலடியை கொடுப்போம்...இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டம்...

இஸ்ரேலுக்கு உதவி செய்யுமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவு...வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவசர ஆலோசனை...மத்திய கிழக்கில் உஷார் நிலையில் அமெரிக்க படைகள்... 

இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை...இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்... 

இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...24 மணி நேர உதவி எண்களை வெளியிட்டு, உதவிக்கு தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளது இந்திய தூதரகம்...

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் 8ம் தேதி கூடுகிறது...புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு...

எஸ்.எஸ்.ஏ. திட்டத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உட்பட 35 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் அதிர்ச்சி...மத்திய அரசு நிதி விடுவிக்காத நிலையில் சிக்கல்...

இன்று, மது மற்றும் போதை ஒழிப்பை வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மகளிர் மாநாடு...கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார் பேட்டையில் ஏற்பாடுகள் தயார்... 

செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 240 கோடி ரூபாய் வசூல்...மத்திய நிதியமைச்சகம் தகவல்...

கேரள அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு புனரமைப்புக்காக

மத்திய அரசு சுமார்145 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...14 மாநிலங்களுக்கு 5 ஆயிரத்து 858 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு...

Tags:    

மேலும் செய்திகள்