பிரம்மாண்டமாக இன்று நடைபெறவுள்ள விசிகவின் மது ஒழிப்பு மாநாடு

Update: 2024-10-02 05:54 GMT

மது மற்றும் போதை ஒழிப்பை வலியுறுத்தி விசிக நடத்தும் மகளிர் மாநாடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார் பேட்டையில் இன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டிற்காக ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சேர்கள் போடப்பட்டுள்ளது. மாநாட்டின் முகமாக புத்தரின் உருவம், மாநாட்டு பந்தலின் பக்கவாட்டில் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் படங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மது ஒழிப்பிற்காக குரல் கொடுத்த அம்பேத்கர், பெரியார், காந்தி ஆகிய தலைவர்களுக்கு ஐம்பது அடியில் பிரமாண்ட கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளது.

குடியால் குடும்பங்களை இழந்த பெண்களின் வார்த்தைகள், மது மற்றும் போதைப் பயன்பாட்டுக்கு எதிராக தலைவர்கள் பலர் குறிப்பிட்ட கருத்துக்கள் ஆகியவை பதாகைகளாக நுழைவு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மது ஒழிப்புக்கு எதிரான கை யெழுத்து இயக்கத்தையும் இந்த மாநாட்டில் விசிகவினர் தொடங்க உள்ளனர். இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்