"பாஜகவில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை" - பிரதமர் மோடி திட்டவட்டம்

பாஜகவில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-15 10:57 GMT
டெல்லியில் உள்ள அம்பேத்கர் பவனில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ்கோயல், பிரகலாத் ஜோஷி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாஜக எம்.பி.க்கள் குடும்ப அரசியலை கட்சிக்குள் கொண்டுவர முயற்சிக்க கூடாது என எச்சரித்தார். குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலானது என்பதால் பிற கட்சியில் உள்ள வம்சாவளி வாரிசு அரசியலை பாஜக எதிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக உத்தரபிரதேசம், கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்றதற்காக ஜேபி நட்டாவிற்கும், நரேந்திர மோடிக்கும் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்