சிபிஐ உயரதிகாரிகள் பெயரில் மோசடி, பணம் கேட்டு மிரட்டும் கும்பலிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மோசடி புகார்களை உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு சிபிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பெயரில், சிபிஐ இலச்சினையை பயன்படுத்தி போலியான பிடியாணை, போலியான சம்மன் உள்ளிட்டவற்றை வாட்ஸ்ப், இமெயில் வாயிலாக அனுப்பி மோசடியாக பணம் கேட்டு மிரட்டும் கும்பல் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.