புதைந்த முண்டகையின் வேறு முகம்...சேற்றுக்குள் துடிக்கும் உயிர்களை கை காட்டும் தெர்மல் ட்ரோன்கள்

Update: 2024-08-03 04:07 GMT

வயநாட்டில் மண்ணுக்கு அடியில் புதைந்த

உடல்களைத் தேடும் பணியில் தெர்மல் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன... புதைந்த உடல்களை மீட்டெடுக்கும் முயற்சி தீவிரம் அதிநவீன தெர்மல் ட்ரோன் கேமராக்கள் கைகொடுக்குமா?...

மண் சரிவால் புதையுண்ட உடல்களை மீட்பதும்... உயிருடன் இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதும் பெரும் சிக்கலாகி உள்ள நிலையில்... அதிநவீன தெர்மல் ட்ரோன்கள் ராணுவத்தினரால் களமிறக்கப்பட்டுள்ளன...

தெர்மல் கேமராக்கள் கொண்ட ட்ரோன்கள்... இவற்றால் என்ன பயன்?...

தெர்மல் கேமராக்களால் மனிதர்கள், விலங்குகளைக் கண்டறிந்து ஸ்கேன் செய்ய முடியும்...

அதாவது தெர்மல் கேமராக்களுடன் கூடிட ட்ரோன்களால்.. கண்களுக்குப் புலப்படாத இடத்தில் யாரும் இருந்தாலும் கூட அவர்கள் இருப்பை உணர்ந்து காட்டிக் கொடுக்க இயலும்...

மனிதர்களைத் தொடர்பு கொள்ளாமலேயே அவர்களின் வெப்ப நிலையை அளந்து தெர்மல் புகைப்படமாகக் கொடுப்பது தான் இந்த தெர்மல் கேமரா...

ஆய்வு செய்யப்பட வேண்டிய இடத்தின் நிலைமையைத் துல்லியமாக கண்காணிக்கும் தெர்மல் ட்ரோன்கள் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்...

பூகம்பம், வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளுக்குப் பின் சேதத்தை மதிப்பிடவும்... உயிர் பிழைத்தவர்களைக் கண்டறிவதற்கும்... அபாயகரமான சூழலை உணர்வதற்கும்... இவை உதவுகின்றன...

அந்த வகையில் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரள கிராமங்களான சூரல் மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் நிலத்தினடியில் சிக்கியுள்ள உடல்களைக் கண்டுபிடிக்க இந்த தெர்மல் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன...

நிலச்சரிவில் சிக்கி சின்னாபின்னமான வீடுகளுக்குள் புதைந்துள்ள உடல்களை மீட்டு வர ஆற்றின் நடுவில் 110 மீட்டரில் ராணுவ வீரர்கள் பெய்லி பாலம் அமைத்தனர்...

அங்கு புதைந்துள்ள உடல்களின் வெப்பத்தை வைத்து கண்டறியக்கூடிய தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணி தொடர்ந்து வருகிறது... இதன்மூலம் மீட்புப் பணி சற்றே எளிதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்