தீவிர புயலாக மாறிய 'டானா'... இன்று இரவு இருக்கும் ஆட்டம்

Update: 2024-10-24 02:16 GMT

தீவிர புயலாக மாறிய 'டானா'... இன்று இரவு இருக்கும் ஆட்டம்

தீவிர புயலாக மாறியுள்ள 'டானா' புயல், இன்று இரவு ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நள்ளிரவு 11.30 மணி நிலவரப்படி, ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 330 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவில் இருந்து 420 கிலோ மீட்டர் தெற்கு தென்கிழக்கு பகுதியிலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் டானா புயல், இன்று இரவு வடக்கு ஒடிசா- மேற்கு வங்க கடற்கரைப் பகுதிகளில் கரையை கடக்க தொடங்கி நாளை காலை முழுமையாக கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது, 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்