"முதல்வர் ஸ்டாலினுக்கு ரொம்ப நன்றி" உத்தரகாண்ட் நிலச்சரிவில் தப்பிய தமிழர்கள் கண்ணீர்
உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச் செலவில் சிக்கிய 30 பேரில் 13 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்... சிதம்பரத்தில் இருந்து கடந்த 1ம் தேதி 30 பேர் அடங்கிய பக்தர்கள் குழு உத்தரகாண்ட் கைலாஷுக்கு ரயிலில் யாத்திரை சென்ற நிலையில் திரும்பி வருகையில் தாவகட் என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சிதம்பரம் பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். தகவல் அறிந்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் அவர்களை காப்பாற்றி டார்ஜூலா பகுதிக்கு அழைத்து வந்தது. மீட்கப்பட்டவர்கள் 13 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வந்தனர். மீதமுள்ளவர்கள் ரயில் மூலம் இன்று மாலை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.