நான் முதல்வன் திட்டம்.. ஆஸி.யில் தமிழக பேராசியர்கள்.. "கல்வி முறையில் மாற்றம்"
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஆஸ்திரேலியாவில் நடந்த தொழிற்கல்வி பயிற்சி திட்டத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினர் கலந்து கொண்டனர். பெர்த் நகரில் உள்ள ஃபீனிக்ஸ் அகாடமியில் 3 வாரங்கள் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட பின், 15 பேராசியர்கள் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், உலகளாவிய அளவில் இருக்கும் கல்வி முறைகளை எப்படி நம் கல்வி முறையில் பயன்படுத்தலாம் என்றும், நம் மாணவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பை உருவாக்கி தருவது என்பது குறித்தும் பயிற்சி பெற்று வந்ததாகவும் தெரிவித்தனர்.