பூமிக்கடியில் 3 நாட்களாக எமனுடன் போராடி உயிரை விட்ட சிறுவன் - கதறி துடித்த கிராமம்

Update: 2024-12-12 05:07 GMT

ராஜஸ்தான் மாநிலம் டவுசா மாவட்டம்கலிகாட் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 55 மணி நேரத்திற்குப் பிறகு சிறுவன் சுயநினைவின்றி மீட்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டுமுறை ECG சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், சிறுவனை காப்பாற்றும் முயற்சி தோல்வி அடைந்த‌தால், இறந்த‌தாக அறிவித்தனர். இதனால், இரவு பகலாக 3 நாட்களாக சிறுவனை மீட்க போராடிய அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்