கண்ணாடிகளை உடைத்து கொண்டு ஹோட்டலுக்குள் பாய்ந்த கார் - அதிர்ச்சி சிசிடிவி
கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஹோட்டலுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சூரில் உள்ள ஹோட்டலின் முன்பு, ஒருவர் காரை நிறுத்த முயன்ற நிலையில், கட்டுப்பாட்டை இழந்து ஹோட்டலின் வரவேற்பு பகுதிக்குள் நுழைந்தது. இதில் கார் மற்றும் ஹோட்டலின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.