லக்கி பாஸ்கராக நினைத்து மாநிலத்தையே பரபரப்பாக்கிய பள்ளி மாணவர்கள்.. - சிக்கியது எப்படி?

Update: 2024-12-12 05:01 GMT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 'லக்கி பாஸ்கர்' பட பாணியில் பள்ளி விடுதியில் இருந்து ஓடிய 9 ஆம் வகுப்பு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்

மகாராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி விடுதியில் இருந்து 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர், 'லக்கி பாஸ்கர்' படத்தில் வருவதுபோல, பணம், வீடு, கார் ஆகிவற்றை சம்பாதித்து திரும்ப வேண்டும் எனக் கூறி, விடுதியில் இருந்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவர்கள் 4 பேர் மாயமானது பற்றி விடுதி நிர்வாகம் அளித்த புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசித் தேடி வந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய, மாணவர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். இந்நிலையில், மாணவர்கள் 4 பேரை போலீசார் விஜயவாடாவில் பிடித்துள்ளனர். தொடர்ந்து, அவர்களை விசாகப்பட்டினம் அழைத்து வந்த போலீசார் பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்