“வெட்கக்கேடு“ - கொந்தளித்த பிரியங்கா காந்தி | BJP | Congress | Priyanka Gandhi
மக்களவை சுமூகமாக நடைபெற்ற வேளையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினார். மணிப்பூருக்கு பிரதமர் மோடி எப்போது செல்வார்? மணிப்பூர் கலவரம் குறித்தும், அதனை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் அமித்ஷா எப்போது பதிலளிப்பார் என கேள்விகளை எழுப்பியவர், மணிப்பூரில் கலவரத்தை நிறுத்தி, அமைதியை நிலைநாட்டுவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினர். இந்த தோல்வியிலிருந்து திசைத்திருப்பவே பாஜக ஜார்ஜ் சோரஸ் விவகாரத்தை எழுப்புவதாகவும் விமர்சித்தார். அவரது பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் அவையை ஒத்திவைக்க நேரிட்டது. அவை முடக்கம் குறித்து கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி, முதல் முறையாக நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு அரசே இடையூறு ஏற்படுத்துவதை பார்ப்பதாகவும், இது வெட்கக்கேடானது எனவும் குற்றம் சாட்டினார்.