டெல்லி ஜி-20 மாநாட்டில் தொடரும் சோதனைகள்.. அடுத்த அதிர்ச்சி அமெரிக்காவிலிருந்து..
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...
ஜில் பைடனுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜோ பைடனுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று உறுதியாகவில்லை. இருப்பினும் அவருக்கு தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு அறிகுறிகள் குறித்து கண்காணிக்கப்படும் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் (Karine Jean-Pierre) தெரிவித்தார்... அத்துடன், ஜில் பைடன் டெலாவேரில் (Delaware) உள்ள ரெஹோபோத் (Rehoboth) கடற்கரை இல்லத்தில் தங்கி கண்காணிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... அதே சமயம் இன்னும் 2 தினங்களில் ஜோ பைடன் இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டிற்காக டெல்லி வரவிருந்த நிலையில், அவர் இந்திய பயணம் மேற்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது...