இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் - ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், நடப்பாண்டில் தமிழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக சட்டப்பேரவையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சட்டப்பேரவையில் இன்று சபாநாயகர் அப்பாவு அவரது இருக்கைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் உரையாற்றிய பின்பு, அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். இதையடுத்து தேசிய கீதத்துடன் அன்றைய சபை நிகழ்வுகள் நிறைவடையும். அதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் பிற்பகல் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். அதில் ஆளுநர் உரை, பட்ஜெட் மீதான விவாதங்களுடன், எத்தனை நாட்கள் சபையை நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.