"18 வயதுக்கு குறைவான பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொள்வது.." அதிரடி காட்டிய மும்பை உயர்நீதிமன்றம்

Update: 2024-11-16 14:44 GMT

மகாராஷ்டிர வார்தா மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த மைனர் பெண் ஒருவர் கடந்த 2019ஆம் ஆண்டு தன் 24 வயது கணவர் மீது போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தன்னுடன் பழகி கட்டாயப்படுத்தி உறவு கொண்டு கர்ப்பமாக்கி, அதன்பிறகு தன்னை திருமணம் செய்து 31 வார கருவை கலைக்க கட்டாயப்படுத்தியதாகவும், தனக்கு உறவில் விருப்பம் இல்லாத போதும் கணவர் வல்லுறவு கொண்டு சித்ரவதை செய்ததாகவும் கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் மைனர் பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த வார்தா செஷன்ஸ் நீதிமன்றம் மைனர் பெண்ணை கற்பழித்த கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவில், "பாதிக்கப்பட்ட பெண் தனது மனைவி என்பதால் அவருடன் உறவில் ஈடுபட்டது கற்பழிப்பு ஆகாது என்றும், அது இருவரின் சம்மதத்துடன் தான் நடந்தது" எனவும் கூறியிருந்தார். எனினும் இதை ஏற்க மறுத்த நீதிபதி, திருமணம் முடிந்தாலும், முடியா விட்டாலும் 18 வயதுக்கு குறைவான பெண்ணுடனோ மனைவியுடனோ உறவு கொள்வது வல்லுறவுதான் எனக் கூறி அந்த இளைஞருக்கு சிறை தண்டனையை உறுதி செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்