RDO-ஐ கொல்ல முயன்ற லாரி.. சினிமா பாணியில் நிஜத்தில் பயங்கரம்

Update: 2024-06-15 07:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் கோட்டாட்சியரை, லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியராக இருப்பவர், தெய்வநாயகி. இவர் மணல் கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனது உதவியாளர் மற்றும் ஓட்டுநருடன் காரில் விசாரணைக்காக சென்றுள்ளார். வளையபட்டி அருகே சென்ற போது, எதிரே வந்த மினிலாரியை நிறுத்தி விசாரிக்க முயன்றுள்ளார். அப்போது, வருவாய் கோட்டாட்சியரை கொலை செய்யும் நோக்கில், அவரது கார் மீது மினி லாரியால் பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர சம்பவத்தில், கார் ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டதால், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட மூவரும் உயிர் தப்பினர். மினி லாரியில் இருந்தவர்கள் கவிநாரிப்பட்டியை சேர்ந்த சுந்தரம் மற்றும் ஓட்டுநர் சங்கர் என்பது தெரிய வந்துள்ள நிலையில், அவர்கள் மீது உரிய நடவடிக்கை அன்னவாசல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்