சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியிட்டு 2 ஸ்டேட்டை பரபரப்பாக்கிய கட்சி நிர்வாகி

Update: 2023-08-09 16:18 GMT

சமூக வலைதளத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே அசாதாரண சூழலை ஏற்படுத்தும் வகையில் செல்போனில் பேசி ஆடியோ பதிவிட்ட இந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.தோட்ட வேலைக்காக தேனியில் இருந்து கேரளாவிற்கு சென்றுவிட்டு ஜீப்பில் திரும்பிய பெண்களை, கேரளாவை சேர்ந்த சிலர் மதுபோதையில் மறித்து தகராறு செய்துள்ளனர். தகராறில் பெண்களை நோக்கி இளைஞர்கள் ஆபாசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கேரள போலீசார், தகராறு செய்த இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தேனியினுள் வரும் கேரளா வாகனங்களை தாக்க கோரி, கம்பத்தை சேர்ந்த அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி அறிவழகன் சமூக வலைதளத்தில் ஆடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரு மாநிலங்களுக்கிடையே அசாதாரண சூழலை ஏற்படுத்தியது மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்