#Breaking : "கரண்ட் ஷாக் சித்திரவதை ... முக்கிய தலைவர்கள் பெயரை கூறுமாறு டார்ச்சர்.."பாராளுமன்ற தாக்குதல் விவகாரம்... கைதான 6 பேர் பரபரப்பு புகார்

Update: 2024-01-31 13:30 GMT

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கான நீதிமன்ற காவலை மார்ச் 1-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

உடலில் மின்சாரம் பாய்ச்சி அரசியல் தலைவர்களை சிக்க வைக்க கொடுமைப்படுத்தியதாக ஆறு பேரும் புகார் தெரிவித்துள்ளனர்.....

கடந்த டிசமபர் 13-ஆம் தேதி நடைபெறறநாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் விவகாரத்தில் செய்யப்பட்ட ஆறு பேருக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலை நீட்டிக்க கோரியும் தாக்கல் செய்த மனுவை

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் வளாகத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹர்தீப் கௌர் விசாரித்தார்.

6 பேரின் நீதிமன்ற காவலை மார்ச் 1-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதனிடையே, நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரும் டெல்லி போலீசார் தங்களை கொடுமைப்படுத்தியதாகவும், விட்டுத் தாளில் கையெழுத்திட நிர்பதிக்கப்பட்டதாகவும், சமூக வலைதள கணக்குகள், இமெயில், செல்போன்களின் பாஸ்வேடு ஆகியவற்றை அளிக்குமாறு நிர்பந்திக்கப்படுவதாகவும், உடலில் மின்சாரம் பாய்ச்சி அரசியல் கட்சிகளை சிக்க வைக்க மிரட்டப்பட்டதாகவும், குறிப்பாக பாலிகிராஃப் சோதனை செய்யும் போது அரசியல் கட்சிகளின் பெயரை தெரிவிக்குமாறும் மிரட்டப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகார் மனு தொடர்பாக பதில் அளிக்க டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்