கடந்த 7 ஆண்டுகளில் 84,119 குழந்தைகளை மீட்டுள்ளது, ரயில்வே பாதுகாப்புப் படை.
ரயில்வே பாதுகாப்புப் படை 'நன்ஹே ஃபரிஸ்டே' என்றழைக்கப்படும் சிறு தேவதைகள் என்ற மீட்பு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் கடந்த ஏழு ஆண்டுகளில், ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் இருந்து 84 ஆயிரத்து 119 குழந்தைகளை ரயில்வேப் பாதுகாப்புப் படை மீட்டுள்ளது. மேலும், 135 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்களை அமைக்கப்பட்டுள்ளன.