நிலச்சரிவு சோகத்தில் இருந்து வெளியே வருவதற்குள் வந்த அடுத்த அதிர்ச்சி செய்தி
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில், கன மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. நிலச்சரிவு காரணமாக ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்று நிலைமையை சரி செய்தனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, திரிவேணி எக்ஸ்பிரஸ், முரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.