ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி கொண்டு செல்ல சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வரும்போது, இருமுடி தனியாக வைக்கப்பட்டு பயணிகள் மட்டும் விமானத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ஐயப்ப பக்தர்கள் கையோடு நெய் தேங்காய் அடங்கிய இரு முடியை விமானத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருமுடியானது எக்ஸ்ரே இ.டி.டி மூலம் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.